| |
| |
 |
| |
வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு அதிகம் செய்வதற்கான,
யாரும் பின்தங்கிவிடாதிருப்பதை உறுதிசெய்வதற்கான அரசாங்கத்தின் கடப்பாடே, காம்கேர்
நிதி. காம்கேர் என்றால்,
- வசதி குறைந்தோருக்குக் கூடுதல் உதவி. வசதி குறைந்தோருக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் சிறந்த முறையில் உதவப் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
- அதிகப் பரவலாக்களும் அதிக உதவிக் கரங்களும். முக்கிய தொடர்பு
மையங்களான சமூக மேம்பாட்டு மன்றங்கள், குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள்,
குடும்பச் சேவை நிலையங்கள் உள்ளிட்ட சமூக, அடித்தள, தொண்டூழிய நிறுவனங்கள்
வழி, உதவி தேவைப்படுவோருக்கு அவர்களது இல்லத்துக்கு அருகில் உதவி கிடைக்கும்.
- உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதில் அதிக நீக்குப்போக்கு. வசதி
குறைந்த சிங்கப்பூரரும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் தனிப்பட்ட
சூழல்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
- எளிமைப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட உதவி. உதவித் திட்டங்கள்
ஒழுங்குபடுத்தப்படும் - உதவி பெறுவது அதிகம் எளிமைப்படுத்தப்படும்.
|
காம்கேரில் மூன்று முக்கிய திட்டங்கள் அடங்கும்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாராருக்கு. அந்தத் திட்டங்களாவன:
- காம்கேர் சுயசார்பு, வசதி குறைந்தோர் சொந்தக்காலில் நிற்க உதவுவதில்
கவனம் செலுத்தும்.
- காம்கேர் Grow, வசதி குறைந்த குடும்பத்துக் குழந்தைகள் வறுமை
வட்டதிலிருந்து வெளியே வருவதற்கு உதவும் வளர்ச்சித் திட்டங்களில் கவனம்
செலுத்தும்.
- காம்கேர் EnAble, நீண்ட கால உதவி தேவைப்படும் வசதி குறைந்தோர் (வசதி
குறைந்த மூத்தோர் மற்றும் முடியாதோர் போன்றோர்) சமூகத்துடன் இணைய உதவுவதில்
கவனம் செலுத்தும்.
|
| |
Top
|
 |
| |
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சமூக மேம்பாட்டு மன்றத்தை, குடிமக்கள் ஆலோசனைக்
குழுவை அல்லது குடும்பச் சேவை நிலையத்தை அணுகுவது, அவ்வளவுதான். அங்குள்ள அதிகாரி
உங்கள் தேவையை ஆராய்ந்து, காம்கேர் திட்டங்களிலிருந்து தேவையான உதவியை வழங்குவார்.
தேசிய அளவிலான மூன்று காம்கேர் திட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. திட்டம் பற்றிய
விவரங்களுக்கு அதன் பெயர் மீது "கிளிக்" செய்யவும். |
| |
| காம்கேர் சுயசார்பு (ComCare SelfReliance) |
| |
 |
சமூகப்
பராமரிப்பு நிறுவன நிதி |
 |
வேலை ஆதரவுத் திட்டம் |
 |
ComCare Transitions (CCT)- in English |
| |
| காம்கேர் Grow |
| |
 |
குழந்தைப்
பராமரிப்புக்கான நிலையம் சார்ந்த நிதி உதவித் திட்டம் - in English |
 |
மழலையர்
பள்ளி நிதி உதவித் திட்டம் - in English |
 |
மாணவர்
பராமரிப்புக் கட்டண உதவித் திட்டம் |
 |
ஆரோக்கியத்
தொடக்கத் திட்டம் |
| |
| காம்கேர் EnAble |
| |
 |
பொது
உதவி |
 |
தொழில்நுட்ப
உதவி நிதி |
| |
| குடிமக்கள் ஆலோசனைக் குழு காம்கேர் நிதி |
வசதி குறைந்தோர் இந்த நிதியிலிருந்து உதவி பெற,
குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களை நாடலாம். சமூக நிறுவவனங்களுக்கும் அடித்தளத்
தலைவர்களுக்கும் உதவுவதில் உள்ள முக்கிய பங்கை உணர்ந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது.
84 குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களுக்கு அவற்றின் காம்கேர் நிதியை அமைப்பதில்
உதவுவதற்காக 4 மில்லியன் வெள்ளி தரப்படும். வசதி குறைந்தோரின் தேவைக்கு ஏற்ப
வெவ்வேறு வழிகளில் அவர்களுக்கு உதவ, குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் அந்த நிதியைப்
பயன்படுத்தலாம். |
| |
Top
|
 |
| |
காம்கேர் ஏற்றுக்கொண்ட முன்னோடித் திட்டங்களில்
சில
- காம்கேர் Enterprise
- வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய முதியோருக்கான வீட்டு உணவு (தொடக்க
நாள்: ஆகஸ்ட், 2005)
- காம்கேர் Silver Connect (தொடக்க நாள்: நவம்பர்/டிசம்பர், 2005)
- உடற்குறை உடையோருக்கான காம்கேர் இல்லச் சேவை (தொடக்க நாள்: 2005ஆம் நிதி
ஆண்டின் மூன்றாம் காலாண்டு)
|
| |
Top
|
 |
| |
காம்கேரின் கீழ், முன்னோடித் திட்டங்களுக்காக
10 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும். அடித்தள அமைப்புகளும் தொண்டூழிய நல அமைப்புகளும்
புதிய முன்னோடித் திட்டங்களை முன்மொழியலாம். அவற்றுக்கான ஆரம்ப நிதியை காம்கேர்
கொடுத்து உதவும்.
திட்டத்தின் மொத்தச் செலவில் 50 விழுக்காடு வரை கூடினபட்சம் 3 ஆண்டுக்கு காம்கேர்
கொடுக்கும்.
விண்ணப்பத்
தாள்களும் வழிகாட்டுதல்களும் (ஆங்கிலத்தில்) |
| |
Top
|
 |
| |
- காம்கேர் என்பது என்ன? அது எப்படி உங்களுக்கு உதவ முடியும்?
- காம்கேர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
|
உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள், சமூக மேம்பாட்டு மன்றம், குடும்பத் தேவை மையம் அல்லது அடித்தள தலைவர்களை நாடலாம்.யாரிடம் உதவி கேட்பதென்று அறியாதவர்கள் காம்கேர் அழைப்புக்குத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் - 1800 222 0000. இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்பவர்களைத் தங்களுக்கு உரிய சங்கத்தை அடைவதற்கு வழி காட்ட operator உள்ளார்கள்.
காம்கேரைப் பற்றிய மற்ற கேள்விகளுக்கு, comcare@mcys.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
|
| |
Top
|
 |
| |
| |
| |
Top
|